செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு செய்யனுமா? இத மட்டும் கண்டிப்பா சேர்க்காதீங்க
Healthy Food Recipes
By Kirthiga
செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும்.
அதிலும் குறிப்பாக செட்டிநாடு சிக்கன், செட்டிநாடு மட்டன் போன்ற உணவுகள் மிகவும் பிரசத்தி பெற்றதாகும்.
இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விட மீன் வகைகளை சாப்பிடுவது உடலிற்கும் நன்மையை தரும்.
அதை எப்படி சுவையாக மற்றும் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
வஞ்சிர மீன் - 8 துண்டுகள்
-
புளி - 1 எலுமிச்சை அளவு
-
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
-
கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு
-
துருவிய தேங்காய் - 1/4 கப்
- சோம்பு - 1 டீஸ்பூன்
-
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
-
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
- வதக்கி அரைப்பதற்கு
-
எண்ணெய் - 1 டீஸ்பூன்
-
தக்காளி - 1
-
பெரிய வெங்காயம் - 1/2
- சின்ன வெங்காயம் - 6
தாளிப்பதற்கு
-
வெந்தயம் - 1 டீஸ்பூன்
-
கடுகு - 1/2 டீஸ்பூன்
-
சின்ன வெங்காயம் - 10
-
பூண்டு - 5 பல்
-
தக்காளி - 1
-
கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
-
முதலில் மீனை சுத்தமாக கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதனுடன் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி ஆற வைத்துக்கொள்ளவும்.
- மிக்ஸியில் தேங்காய், பெருஞ்சீரகம், தனியாதூள் மிளகுத்தூள், மிளகாய் தூள் மற்றும் வதக்கிய பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
- பின் அரைத்த வைத்ததை சேர்த்து அதனுடன் மஞ்சள் மற்றும் உப்பு, தண்ணீர், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- இறுதியாக கொதித்துக்கொண்டிருக்கும் வேளையில் எண்ணெய் பிரிந்து வரும், அந்த சமயத்தில் வெட்டிவைத்த மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்ததால் சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US