குழந்தைகள் விரும்பி உண்ணும் செட்டிநாடு ரங்கூன் புட்டு.., எப்படி செய்வது?
செட்டிநாடு சமையல் காரசார உணவுகளுக்கு மட்டுமல்ல இனிப்பு வகைகளுக்கும் பெயர் பெற்றது.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான செட்டிநாடு ரங்கூன் புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெல்லம்- 1 கப்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 15
- திராட்சை- 10
- தேங்காய்- 1 கப்
- ரவை- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் நெய் சேர்த்து அதனையுடன் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவலை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே வாணலில் நெய் சேர்த்து அதில் ரவை சேர்த்து வறுத்துகொள்ளவும்.
இதற்கடுத்து இதில் கரைத்த வெல்லம் சேர்த்து கிளறி கெட்டியாகி வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் ஏலக்காய் தூள், சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ரங்கூன் புட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |