பச்சரிசி இருக்கா? உடனே செட்டிநாடு ஸ்டைல் வெள்ளை பணியாரம் செய்து பாருங்க
செட்டிநாடு ஸ்டைல் வெள்ளை பணியாரம் ஒரு அழகான மற்றும் இனிமையான சுவைக் கொண்டதாகும்.
சரியான அளவுகளில் அரிசி உளுந்தை அரைத்து, செய்தால் வெள்ளை வெள்ளையாக பஞ்சு போல தயாராகும்.
இதற்கு தொட்டுக்கொள்ள நல்ல காரசாரமான தக்காளி சட்னி, காரச் சட்னி, சைடு டிஷ் ஆக வைப்பது சூப்பரா இருக்கும்.
இந்த வெள்ளை பணியாரத்தை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
பச்சரிசி - 1 கப்
- உளுந்து பருப்பு - 3/4 கப்
-
தண்ணீர்
உப்பு - 1/2 தேக்கரண்டி
-
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
1. பச்சரிசி மற்றும் உளுந்து பருப்பு இரண்டையும் தனித்தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. பின்பு தண்ணீரை வடித்து விட்டு இரண்டையும் சேர்த்து கலந்து விடவும்.
3. அடுத்து ஊறவைத்த பச்சரி, உளுந்து பருப்பு இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
4. அரைத்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
6. பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு அரை கரண்டி மாவை எடுத்து கடாயின் நடு பகுதியில் ஊற்றவும்.
7. ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.
8. காரா சட்னியுடன் சூடான செட்டிநாடு வெள்ளை பணியாரத்தை பரிமாறவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |