எச்சில் ஊறும் சுவையில் செட்டிநாடு இறால் தொக்கு.., எப்படி செய்வது?
இந்த செட்டிநாடு இறால் தொக்கு சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டிகளுடன் மிகவும் நன்றாக இருக்கும்.
அட்டகாசமான சுவையில் செட்டிநாடு இறால் தொக்கு வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இறால்- 1kg
- பெரிய வெங்காயம்- 1
- சின்ன வெங்காயம்- 15
- தக்காளி- 3
- பச்சை மிளகாய்- 4
- காய்ந்த மிளகாய்- 10
- உப்பு- தேவையான அளவு
- கடுகு- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
- தனியா- 1 ஸ்பூன்
- மிளகு- ¾ ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- மல்லித் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தனியா, மிளகு, சோம்பு, காய்ந்த மிளகாய், 1 துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு, பெரிய வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை பொடிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பின் இதில் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் போடவும்.
இதையடுத்து தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு நறுக்கிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
பின் இதை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சின்ன வெங்காயம், சோம்பு சேர்த்து வறுக்கவும்.
வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கெட்டியான பிறகு அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
நன்கு வதங்கிய பிறகு சுத்தப்படுத்திய இறாலை சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால் செட்டிநாடு இறால் தொக்கு ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |