பளபளப்பான சருமத்திற்கு சியா விதைகள்: இப்படி பயன்படுத்துங்க
சருமம் பளபளப்பாக மற்றும் பொலிவுடன் இருக்க சியா விதைகளை பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.
சியா விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும் பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
மேலும் சருமத்தின் நச்சுக்களை வெளியேற்றவும், ஈரப்பதமாக்கவும், ஆரோக்கியமான பளபளப்பை வழங்கவும் உதவும்.
பளபளப்பான சருமத்தை அளிக்க உதவும் சியா விதை ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சியா விதைகள்-1 டீஸ்பூன்
- தண்ணீர்-2 டீஸ்பூன்
- தேன்- 1 டீஸ்பூன்
- அத்யாவசிய எண்ணெய்-2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் சியா விதைகளை கொட்டு ஊறவைக்க வேண்டும்.
ஜெல் போன்ற தன்மை வரும்வரை 15-20 நிமிடம் நன்கு ஊறவைக்க வேண்டும்.
ஈரப்பதத்திற்காக இதில் தேன் சேர்த்து கொள்ளவேண்டும். குறிப்பாக உங்களுக்கு உணர்திறன் அல்லது முகப்பரு பாதிப்பு இருந்தால் தேன் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் தோல் வகைக்கு ஏற்ற ஒரு அத்தியாவசிய எண்ணெயை தேர்ந்தெடுத்து இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இந்த சியா விதை பேக்கை உங்க கண் பகுதியை தவிர்த்து முகத்தில் சமமாக தடவ வேண்டும்.
இந்த பேக்கை 10-15 நிமிடங்கள் முகத்தில் அப்படியே விடவும்.பின் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமான துண்டால் துடைத்து வழக்கமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |