சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: நாட்டின் வெறுக்கப்படும் மேயரின் அறிவிப்பு
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியான பொலிஸ் அதிகாரியின் இறுதிச்சடங்கில், நகர மேயர் இறந்தவர் குடும்பத்தின் விருப்பத்தால் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி
கடந்த நவம்பர் 4ஆம் திகதி சிகாகோவின் தெற்குப் பகுதியில், 26 வயதான பொலிஸ் அதிகாரி Enrique Martinez சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. மேயர் பிரண்டன் ஜான்சன் அதிகாரியின் இறுதிச் சடங்கில் வரவேற்கப்பட மாட்டார் என பொலிஸ் சங்கத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனாலும், மேயர் பிரண்டன் ஜான்சன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என்று அவரது அலுவலகம் கூறியது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "முழு சிகாகோ காவல்துறையின் அதிகாரிகளுக்கும், குறிப்பாக துக்கத்தின் தருணங்களில் ஆதரவளிப்பது மேயரின் கடமை" என கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, Enriqueயின் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, 'Enriqueகிற்கான எந்தவொரு விழாவிலும் அவரின் குடும்பத்தினர் நிச்சயமாக மேயரை விரும்பவில்லை' என தெரிவித்தார்.
கோரிக்கைக்கு மதிப்பளித்து வருகிறேன்
அதாவது, நாட்டின் மிகவும் வெறுக்கப்படும் மேயர் என முத்திரை குத்தப்பட்ட பிராண்டன் ஜான்சன், இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே இருக்குமாறு, Enriqueயின் குடும்பத்தினர் வெள்ளைக்கிழமை கூறினர்.
மேலும், Enriqueயின் தாயார் பேசும்போது, "மேயர் உண்மையிலேயே Enrique குடும்பத்தை கௌரவிக்க விரும்பினால், அவர் குடும்ப விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இது அவர்களின் விருப்பத்தைப் பற்றியது" என்றார்.
இந்த நிலையில் மேயர் தனது முடிவை மாற்றியுள்ளார். அவர் கொல்லப்பட்ட அதிகாரியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், "நான் குடும்பத்தினரிடம் இருந்து கேட்டேன், அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து வருகிறேன். மேலும் மரியாதைக்குரிய இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளத் திட்டமிடமாட்டேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |