Sussexல் வெடித்துச்சிதறிய சிறிய ரக விமானம்; 2 பேர் மரணம்
பிரித்தானியாவின் மேற்கு சசெக்ஸில் உள்ள குட்வுட் ஏர்ஃபீல்டில் நேற்று விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை மாலை 4.30 மணியளவில், மேற்கு சசெக்ஸில் உள்ள குட்வுட் ஏர்ஃபீல்டில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து பொலிஸார், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதனைத் தொடர்ந்து விமான விபத்து புலனாய்வு கிளைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக சசெக்ஸ் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், விமானத்தில் பயணித்த 2 ஆண்களும் இறந்துவிட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தினார்.
விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் Bulls Cross-ஐ சேர்ந்த 65-வயது நபர் என்றும் மற்றோருவர் Gosport-ஐ சேர்ந்த 58-வயது நபர் என்றும் சசெக்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
வெடித்துச் சிதறிய விமானத்தின் ரகம், விபத்திற்கான காரணம் என வேறு எந்த தகவலையும் பொலிஸார் வெளியிடவில்லை. விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
A 65-year-old man from Bulls Cross and a 58-year-old man from Gosport have sadly died following a light aircraft crash just north of Goodwood Airfield this afternoon.
— Sussex Police (@sussex_police) June 30, 2021
Officers are providing support to their families at this difficult time. pic.twitter.com/QgNzAkE9JT