எச்சில் ஊறும் சுவையில் நாட்டு கோழி சிந்தாமணி.., எப்படி செய்வது?
பொதுவாக நாட்டு கோழிகள் சுவை, சத்துகள் மற்றும் இயற்கையான வளர்ப்பு முறைக்கு மிகவும் பெயர் பெற்றது.
பிராய்லர் கோழிகளை விட இவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளில் அதிக புரதம், கொழுப்பு குறைவான சத்துகள் நிறைந்துள்ளன.
அதன்படி, கொங்கு மண்டலத்தின் பாரம்பரியமிக்க பிரபலமான உணவு தான் இந்த நாட்டுக் கோழி சிந்தாமணி.
அந்தவகையில், நாவூறும் சுவையில் நாட்டு கோழி சிந்தாமணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 10
- சின்ன வெங்காயம்- 15
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- நாட்டு கோழி- ½kg
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் இதில் விதை நீக்கிய காய்ந்த மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து இதில் கழுவி சுத்தம் செய்து வைத்த நாட்டு கோழி சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும்.
இதனைதொடர்ந்து, இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும்.
இறுதியாக சிக்கன் நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான நாட்டுக்கோழி சிந்தாமணி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |