சிக்கன் அடிக்கடி சாப்பிடுவதால் உண்டாகும் சிக்கல்கள் என்னென்ன தெரியுமா ?
அசைவ உணவு என்றாலே பலரின் நினைவிலும் முதலில் வந்து நிற்பது சிக்கன் தான். சிக்கன் சுவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக் கூடியதாகும்.
ஏனெனில் நமது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் சிக்கனிலிருந்து கிடைக்கிறது. பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு சந்தேகம் சிக்கன் அதிகம் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்துமா என்பது தான்.
ஆம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிகம் சிக்கன் சாப்பிடும் பிரச்சினை ஏற்படுத்தும்.
சிக்கன் சாப்பிடும் அளவானது அவரவர் உடலமைப்பை பொறுத்து மாறுபடுவதாகும்.
ஒரு வேளை நீங்கள் ஒரு சாதாரண ஆளாக இருந்து உங்களின் உடல் எடை 65 முதல் 75 கிலோக்குள் இருந்தால் நீங்கள் தினமும் 200 கிராம் சிக்கனை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இது உடல் கட்டமைப்புகளை உருவாக்கவும், பராமரிக்கவும் உதவுவதோடு நம் உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.
ஆனால் அடிக்கடி சிக்கன் சாப்பிடுவது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும், இதோடு தினமும் சிக்கனை சாப்பிடுவது, உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கும். அது, இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.
கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலும், அதிக புரதம் உடலுக்கு சென்றாலும், அது மறைமுகமாக இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
அதுமட்டுமல்ல, சிக்கன் போன்ற விலங்கு அடிப்படையான புரதச்சத்தை அதிகமாக சாப்பிடுவது, உடல் எடையைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுத்தலாம். தினமும் இறைச்சி சாப்பிடுபவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் குறைந்த BMI கொண்டுள்ளனர்.
முக்கியமாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.