எச்சில் ஊறும் சுவையில் நெய் சிக்கன் வறுவல்.., எப்படி செய்வது?
நெய் சிக்கன் வறுவல் தோசை, இட்லி, சப்பாத்தி , பூரி, சாப்பாடு என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
அந்தவகையில், எச்சில் ஊறும் சுவையில் நெய் சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி விதை- 3 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 5
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- சிக்கன்- 1 kg
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை- 1
- உப்பு- தேவையான அளவு
- நெய்- 5 ஸ்பூன்
- வெங்காயம்- 2
- கறிவேப்பிலை- 2 கொத்து
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து வறுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கழுவி எடுத்த சிக்கன், தயிர், உப்பு, எலுமிச்சை, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் அரைத்த போடி சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாயால் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதனைதொடர்ந்து, இதில் ஊறவைத்த சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.
இறுதியாக சிக்கன் நன்கு வெந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான நெய் சிக்கன் வறுவல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |