பிரியாணியில் கோழி தலை: அருவருப்பை ஏற்படுத்திய சம்பவம்
கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான உணவகத்தில் வாங்கிய பிரியாணி பார்சலில் கோழியில் தலை இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரியாணியில் கோழி தலை
கேரள மாநிலத்தில் ஏர்குளம் பகுதியில் வசிக்கும் பிரதிபா என்பவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்களை வாங்கி, குடும்பத்தாருடன் சாப்பிடுவதற்காக. வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்த போது, அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்துள்ளது.
இதை பார்த்த பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
எனவே பிரியாணி வாங்கப்பட்ட கடைக்கு சென்ற அதிகாரிகள் அதிரடியான சோதனை செய்தனர். இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்து மூடியுள்ளனர்.
மேலும் பிரியாணிக்குள் கோழி தலை இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |