Chicken Thokku: சூடான சாதத்திற்கு சுவையான சிக்கன் தொக்கு: எப்படி செய்வது?
இதுவரைக்கும் சிக்கன் பிரியாணி, சுக்கா, குழம்பு, வறுவல், 65 என பலவிதமான வகையில் சிக்கனை செய்து சாப்பிட்டிருப்போம்.
இனி சிக்கன் எடுத்தால் இந்த சிக்கன் மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இந்த சிக்கன் மசாலா இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- ½kg
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- ஏலக்காய்- 3
- மல்லி- 1 ஸ்பூன்
- கிராம்பு- 5
- சீரகம்- ½ ஸ்பூன்
- பட்டை- 4 துண்டு
- வெந்தயம்- ½ ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- பூண்டு- 10 பல்
- காய்ந்த மிளகாய்- 3
- கறிவேப்பிலை- சிறிதளவு
- மிளகாய் தூள்- 1½ ஸ்பூன்
- எலுமிச்சை- ½
செய்முறை
முதலில் எலும்பில்லாத சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் ஏலக்காய், மல்லி, கிராம்பு, சீரகம், பட்டை, வெந்தயம், கடுகு சேர்த்து பொன்னிறமாக வறுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் சிக்கன் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் மூடிபோட்டு வேகவைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே வாணலில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சிக்கன் துண்டுகளை பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பின் பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கி உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.
இறுதியாக பொரித்த சிக்கன் சேர்த்து கலந்து சூடான சாதத்தில் சேர்த்து பிணைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |