நாவூறும் சுவையில் சிக்கன் மோமோஸ்.., வீட்டிலேயே இட்லி பாத்திரத்தில் செய்யலாம்
மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு.
அந்தவகையில் தற்போது சுவையான சிக்கன் மோமோஸ் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மைதா - 1 கப்
- உப்பு - ½ ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- சிக்கன் கீமா - 300g
- வால்நட் - ¼ கப்
- பச்சை மிளகாய் - 2
- பூண்டு - 3 பல்
- இஞ்சி - 1 துண்டு
- வெங்காயம்- ½ கப்
- வெங்காயத்தாள்- ¼ கப்
- மிளகு தூள் - ½ ஸ்பூன்
- சோயா சாஸ் - 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்.
பின் அதில் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
அடுத்து ஒரு கடாயில் வால்நட் சேர்த்து வறுத்து ஆறவிட்டு கொரகொரப்பாக மிக்சியில் அரைத்து தனியே வைக்கவும்.
இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வால்நட், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி பூண்டு, நறுக்கிய வெங்காயத்தாள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதைதொடர்ந்து, சிக்கன் கீமாவில் உப்பு, மிளகு, சோயா சாஸ், வால்நட் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் தயார் செய்து வைத்த மோமோஸ் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தில் போ;ல சிறியதாக தேய்த்து கொள்ளவும்.
அடுத்து மாவின் நடுவில் சிக்கன் சேர்மத்தை வைத்து மாவின் ஓரங்களை மடிக்கவும்.
இறுதியாக தயார் செய்த மோமோஸை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி 15 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் சுவையான சிக்கன் மோமோஸ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |