குழந்தைகள் விரும்பி உண்ணும் சிக்கன் நகெட்ஸ்.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு தான் இந்த சிக்கன் நகெட்ஸ்.
அந்தவகையில் வீட்டிலேயே சுவையான சிக்கன் நகெட்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மிளகு- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- மல்லி தூள்- ½ ஸ்பூன்
- சீரக தூள்- ½ ஸ்பூன்
- வெங்காய தூள்- ¼ ஸ்பூன்
- பூண்டு தூள்- ¼ ஸ்பூன்
- சிக்கன்- 250g
- முட்டை- 1
- பிரட் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மிளகு தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், வெங்காய தூள், பூண்டு தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்த ஒரு கிண்ணத்தில் முட்டையை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் எலும்பில்லாத சிக்கன், கலந்து வைத்த மசாலா 1 ஸ்பூன், கலந்து வைத்த முட்டை 1 ஸ்பூன், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு தட்டில் பிரட் தூள் மற்றும் கலந்து வைத்த மசாலா சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் அரைத்த கலவையை சிறிய சிறியதாக தட்டி பிரட் தூளில் பிரட்டி வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தயாரித்து வைத்த நகெட்ஸ்களை பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் நகெட்ஸ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |