வெயிற்காலத்தில் ஏற்படும் அம்மை தழும்பு மறைக்க இதோ சில இயற்கை வைத்தியம்..!
home remedies
chicken pox
By Kishanthini
பொதுவாக வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கின்றன. அவற்றில் அம்மை நோய்களுக்கு முக்கிய இடமுண்டு.
அதிலும் குறிப்பாகச் அம்மை நோய் (Chicken pox) நோய் அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இதுதான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. அதற்கு ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- நன்கு பழுத்த ஓரு எலுமிச்சம் பழத்தை எடுத்து கொள்ளவும் அதை குறுக்காக வெட்டவும். பின் அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
- ஒரு கைப்பிடியளவு முருங்கை இலையை எடுத்து அவற்றை நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து அம்மை தழும்புகள் உள்ள இடத்தில் நன்றாக பூச வேண்டும்.
பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் குளித்துவிடவும், இவ்வாறு தினமும் செய்து வர ஒரே வாரத்தில் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
- ஒரு சிறிய துண்டு மஞ்சள் மற்றும் கருவேப்பிலை சிறிதளவு இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து அம்மை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலறவிடுங்கள். பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.
பின்பு இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர அம்மை தழும்புகள் உடனே மறைந்து விடும்.
- 20 வேப்பிலை இலைகளை எடுத்துக்கொண்டு அதோடு சிறிதளவு மஞ்சள் சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு சுண்டும் வரை காய்ச்சி அதை குடிக்க வேண்டும். இதன் மூலம் அம்மை விரைவில் குணமாகும்.
- உடலை குளிர்விக்கும் உணவுகள், பழங்கள், காய்கள், கீரைகள், தயிர், மோர் சேர்ப்பது, உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றால் அம்மை நோய் வராமல் தடுக்கலாம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US