நாவூறும் சுவையில் மொறுமொறு சிக்கன் சமோசா.., எப்படி செய்வது?
சமோசாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்பார்கள்.
அந்தவகையில், மொறு மொறு சிக்கன் சமோசா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 2 கப்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- பூண்டு- 6 பல்
- இஞ்சி- 1 துண்டு
- சிக்கன்- ½ kg
- உப்பு- தேவையான அளவு
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- தக்காளி சாஸ்- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக பிணைந்து 30 நிமிடம் அப்படியே வைத்துக்கொள்ளவும்.
பின் இதை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி சப்பாத்தி மா போல் தேய்த்து 30 வினாடிகள் போல தவாவில் சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதை அனைத்தையும் ஒன்றாக வைத்து ஓரங்களை நறுக்கி செவ்வக வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் சிக்கன் அரைத்து சேர்த்து வதங்கியதும் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து சிக்கன் நன்கு வேகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து அதில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி கிளறி வைத்துக்கொள்ளவும்.
இதைத்தொடர்ந்து வெட்டிவைத்த சப்பாத்தியை முக்கோண வடிவில் மடித்து அதற்குள் கலந்து வைத்து கலவையை வைத்து மடித்துக்கொள்ளவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் வைத்து சூடானதும் சமோசாவை பொறித்து எடுத்தால் மொறு மொறு சிக்கன் சமோசா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |