Chicken Shawarma: சுவையான சிக்கன் ஷவர்மா.., இனி வீட்டிலேயே செய்யலாம்
சிக்கன் ஷவர்மா பிரபல உணவகங்களிலும், தெருவோர கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரபலமான உணவாகும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவுமே விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், வீட்டிலேயே சுத்தமான மற்றும் ஆரோக்கியமான முறையில் சிக்கன் ஷவர்மா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஈஸ்ட்- 2 ஸ்பூன்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- மைதா- 3 கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- கேரட்- 1
- வெள்ளரிக்காய்- 1
- குடைமிளகாய்- 1
- புதினா- சிறிதளவு
- எலுமிச்சை- 1
- மிளகு தூள்- சிறிதளவு
- எலும்பில்லா சிக்கன்- ½ kg
- தயிர்- 4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- சீரக தூள்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- மயோனெய்சு- ½ கப்
- பூண்டு- 1 பல்
- வெங்காயம்- 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஈஸ்ட், சர்க்கரை மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வைத்தால் ஈஸ்ட் பொங்கி வரும்.
பின் அதனுடன் மைதா, உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்து நன்கு பிணைந்து அதன் மேல் எண்ணெய் தடவி 1 மணி நேரம் அப்படியே வைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி 5 நிமிடம் அப்படியே விட்டு பின் கொஞ்சம் தட்டையாக தேய்த்து தவாவில் சுட்டு துணி வைத்து மூடி வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் நீளமாக நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், குடைமிளகாய், உப்பு, புதினா, மிளகு, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய வைத்த சிக்கன், தயிர், மஞ்சள் தூள், சீரக தூள், மிளகு தூள், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் ஒரு வாணலில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சிக்கனை நன்கு பொரித்து பின் சிறிய சிறியதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு சின்ன பவுலில் மயோனெய்சு, அரைத்த பூண்டு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஷவர்மா செய்ய முதலில் தயார் செய்து வைத்த ரொட்டி எடுத்து அதன் ஒரு பக்கத்தில் பூண்டு மயோனெய்சு தடவி அதன் மேல் செய்த சிக்கன் துண்டுகள் மற்றும் காய்கறி சாலட் வைத்து அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு மயோனெய்சு சேர்த்து மடித்து சாப்பிட்டால் சுவையான சிக்கன் ஷவர்மா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |