Chicken sukka: நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா.., இனி இப்படி செய்யுங்கள்
சிக்கனை நாம் பல வகைகளில் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த சிக்கன் சுக்காவை பெரும்பாலும் சாப்பிட்டிருக்க மாட்டோம்.
இந்த சிக்கன் சுக்கா சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் ஊறவைக்க
- சிக்கன்- 1 kg
- மிளகாய் தூள்- 1½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 3 சிட்டிகை
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சை- ½
வறுத்து அரைக்க
- கிராம்பு- 3
- பட்டை- 1 துண்டு
- மல்லி- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 3
சிக்கன் செய்ய
- எண்ணெய்- தேவையான அளவு
- பூண்டு- 5 பல்
- இஞ்சி- 1 துண்டு
- கறிவேப்பிலை- 2 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மிளகு தூள், இஞ்சி போன்று பேஸ்ட், தயிர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
பின் ஒரு வாணலில் கிராம்பு, பட்டை, மல்லி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து ஊறவைத்த சிக்கனை நன்கு பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் சிக்கன் பொரித்த எண்ணெயிலேயே சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து பொரிக்கவும்.
இதில் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்து நன்கு கெட்டியாகி வரும்வரை வதக்கவும்.
நன்கு நிறம் மாறி வந்ததும் இதில் பொரித்த சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான சிக்கன் சுக்கா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |