நாவூறும் சுவையில் மொறுமொறு சிக்கன் வடை.., எப்படி செய்வது?
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மொறுமொறு சிக்கன் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு- ½ கப்
- சிக்கன்- ½kg
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- வெங்காய- 1
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- கறிவேப்பிலை- 1 கொத்து
- சோம்பு- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு சேர்த்து நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு குக்கரில் சிக்கன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து ஆறவைத்துக்கொள்ளவும்.

பின் ஆறவைத்த சிக்கனை எலும்பில்லாமல் உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கடலை பருப்பு, சிக்கன், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சோம்பு, இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த கலவையை வடை போல் தட்டி பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் வடை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |