ஒரே நேரத்தில் 20 கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு! பெண்ணொருவர் கொடுத்த புகாரையடுத்து பொலிஸ் அதிரடி
தமிழகத்தின் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட சென்ற பெண் ஒருவரை சாதிப்பெயரை சொல்லி அங்கிருந்த தீட்சிதர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை உள்ளது. இதன்மீது ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக அங்குள்ள தீட்சிதர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஏற்கனவே பிரச்சினை காரணமாக, சஸ்பெண்டு செய்யப்பட்ட கணேஷ் தீட்சிதர் என்பவர் சாமி கும்பிட சென்றபோது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் பொலிசில் அளித்த புகாரின் பேரில் பொலிசார் 3 தீட்சிதர்கள் பேர் கொலை முயற்சி வழக்குபதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், அடுத்த நாள், தீட்சிதர் ஒருவர் பெண் பக்தர் ஜெயஷீலா என்வரைரை சாமி கும்பிட கனகசபைக்கு அழைத்துச் சென்றபோது கனகசபை மீது ஏறக் கூடாது என பல தீட்சிதர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண், தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தாரர்.
அந்தப் புகாரின் பேரில் புகாரில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல், மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தீட்சிதர்களுக்கு இடையே ஏற்பட்ட போலீசில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 தீட்சிதர்கள் மீது இதுவரை காவல்துறையினரோ, அறநிலையத் துறையினரோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர். அவர்கள், கோவிலுக்குள் தான் இருக்கின்றனர். பூஜை செய்கின்றனர். அவர்கள் கைது செய்யப்படவில்லை.
ஆனால், நாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால், தீட்சிதர்களின் ஒரு தரப்பினரோ, நடராஜர் கோவிலின் கனகசபை மீது அனைவரும் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். பழைய முறைப்படி அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.