முதலமைச்சர் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்- தமிழக அரசு
தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும், ஆரோக்கியமாக கல்வி கற்பதையும் ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன்பிறகு, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தினர்.
இந்தச் சூழலில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது.

இதன்பிறகு, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் திகதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில் "முதலமைச்சர் காலை உணவு திட்டம்" எனும் பெயரை மாற்றி, "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்" என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |