தமிழரின் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
இன்று தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வரின் பொங்கல் வாழ்த்து
தமிழ் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிகாலையில் எழுந்து, வீட்டு வாசலில் கலர் கலராக கோலம்போட்டு இந்த பொங்கலை ஆரம்பிக்கின்றனர்.
பின்பு புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு, கரும்பு மற்றும் பல வகையான காய்கறிகள், கிழங்குகளை படையலிட்டு, தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியானது, "உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்" என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |