YouTube பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த மாமியார் மற்றும் கணவர்.., கடைசியில் குழந்தை உயிரிழப்பு
வீட்டிலேயே YouTube பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை உயிரிழப்பு
தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே உள்ள செங்கீரையைச் சேர்ந்த தம்பதியினர் ராஜசேகரன் மற்றும் அபிராமி. இதில், மனைவி அபிராமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கணவர் ராஜசேகரனுக்கு அல்லோபதி மருத்துவம் மீது நம்பிக்கை இல்லாததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று அபிராமிக்கு பிரசவ வலி வந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே எப்படி பிரசவம் பார்ப்பது என்று YouTube -ல் பார்த்துள்ளார்.
பின்னர், தனது தாயிடம் இதுகுறித்து கூறிய ராஜசேகரன் இருவரும் சேர்ந்து YouTube பார்த்து பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த மகிழ்ச்சி சிறிது நேரம் அவர்களுக்கு நீடிக்கவில்லை. பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அபிராமியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜசேகரினிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |