அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் பயங்கர தீ: குழந்தை பலி.. உயிர்தப்பிய 80 வயது மூதாட்டி
Child died in house fire of lake macquarie nsw: அவுஸ்திரேலியாவில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை உயிரிழந்தது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை பலியாக, மூதாட்டி மற்றும் ஒரு குழந்தையும் உயிர்தப்பினர்.
அவசர சேவைகளுக்கு அழைப்பு
அவுஸ்திரேலிய நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் லேக் மக்குவாரியில் இருந்து அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அங்கிருந்த வீடொன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்க, உள்ளே இருந்தவர்களை மீட்புப்படையினர் காப்பாற்றினர்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக வீட்டினுள் குழந்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது.
உயிருடன் மீட்பு
மற்றொரு குழந்தையும், 80 வயது மூதாட்டியும் உயிருடன் மீட்கப்பட்டனர். காப்பாற்றப்பட்ட 5 வயது குழந்தைக்கு புகையை சுவாசித்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், அந்த மூதாட்டி தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையில், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற ஒரு பதின்வயது சிறுவனும், காலில் ஏற்பட்ட கடுமையான வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |