பிரித்தானிய பள்ளிகளில் இந்து விரோத வெறுப்பு பாரியளவில் உள்ளது: அதிர்ச்சி அறிக்கை
பிரித்தானியாவில் உள்ள இந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் இந்து விரோத வெறுப்பை அனுபவித்ததாக கூறுகிறார்கள்.
பள்ளியில் இந்து விரோத வெறுப்பை அனுபவிக்கும் குழந்தைகள்
பிரித்தானியாவில் ஹென்றி ஜாக்சன் சொசைட்டி (Henry Jackson Society) நடத்திய இந்து வெறுப்பு குறித்த முதல் ஆய்வில், 51 சதவீத இந்து குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியில் தங்கள் குழந்தை இந்து விரோத வெறுப்பை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், இந்திய மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவான பள்ளிகள் மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் எதுவும் இல்லை என பதிவாகியுள்ளன.
Representative Image Photograph: Kate Green/Pool via Reuters
பயங்கரவாத எதிர்ப்பு சிந்தனை அமைப்பான ஹென்றி ஜாக்சன் சொசைட்டி புதன்கிழமை (ஏப்ரல் 19) இந்த அறிக்கையை வெளியிட்டது.
மேலும் இந்த ஆய்வில், 19 சதவீத இந்து பெற்றோர்கள் பள்ளிகளால் இந்து விரோத வெறுப்பை அடையாளம் காண முடியும் என நம்புகின்றனர்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள்
ஆய்வில் பங்கேற்ற சிலரால் இந்து மதத்தைப் போதிப்பது இந்து மாணவர்களிடம் மதப் பாகுபாடுகளை வளர்ப்பதாகக் கூறப்பட்டதாகவும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
இந்து மாணவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றும்படி கொடுமைப்படுத்துவது, மற்றொரு மாணவர் மீது மாட்டிறைச்சி வீசப்படுவது போன்ற சம்பவங்கள், இந்து மாணவர்களால் பதிவுசெய்யப்பட்ட மற்றும் எதிர்கொள்ளப்பட்ட சில எடுத்துக்காட்டுகளில் அடங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Getty Images
ரிஷி சுனக் பிரதமராக இருக்கும் நேரத்தில்...
நாடு முழுவதும் உள்ள 988 இந்துப் பெற்றோர்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வின் முடிவில், இந்த அறிக்கை பிரிட்டிஷ் பள்ளிகளில் இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு அதிகமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்து மதத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராக இருக்கும் இந்த நேரத்தில், 'பள்ளிகளில் இந்து விரோத வெறுப்பு' என்ற தலைப்பிலான அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.