குழந்தை இல்லாதவர்களுக்கு கூடுதல் வரி: ஜேர்மனி திட்டம்
ஜேர்மனியில், குழந்தை இல்லாதவர்கள் கூடுதல் வரி செலுத்தும் வகையிலான வரைவு மசோதா ஒன்றை அமைச்சர் ஒருவர் முன்வைத்துள்ளார்.
குழந்தை இல்லாதவர்களுக்கு கூடுதல் வரி
அதாவது, சில நாடுகளில் முதியவர்களுக்கு உதவுவதற்காக அரசே சில திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
ஜேர்மனியைப் பொருத்தவரை, முதியவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்குகிறது.

அதற்கு அரசுக்கு பணம் வேண்டுமே! ஆகவே, குடிமக்கள் அனைவரும் இந்த முதியோர் நல நிதிக்கு தங்கள் பங்களிப்பைச் செலுத்தவேண்டும்.
ஒரு குழந்தை உடைய பெற்றோர், தங்கள் மாத வருவாயில் 1.8 சதவிகிதமும், இரண்டு குழந்தைகள் உள்ளவர்கள் 1.55 சதவிகிதமும், மூன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உடையவர்கள் 1.3 சதவிகிதமும் வரியாக செலுத்தவேண்டும்.
குழந்தைகள் இல்லாதவர்கள், இதுவரை இந்த முதியோர் நல நிதிக்காக தங்கள் வருவாயில் 1.8 சதவிகிதத்தை வரியாக செலுத்திவந்தார்கள்.
இந்நிலையில், குழந்தை இல்லாதவர்கள், இனி இந்த முதியோர் நல நிதிக்காக தங்கள் மாத வருவாயில், கூடுதலாக 0.7 சதவிகிதம், அதாவது, மொத்தம், 2.5 சதவிகிதம் வரியாக செலுத்தவேண்டும் என்று கூறும் வரைவு மசோதா ஒன்றை ஃபெடரல் சுகாதார அமைச்சரான நினா ( Nina Warken) முன்வைத்துள்ளார்.
அதாவது, குழந்தைகள் உடையவர்கள், ஜேர்மனியின் எதிர்காலத்துக்காக உழைக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கி, அதற்காக செலவும் செய்து வருகிறார்கள்.
குழந்தை இல்லாதவர்கள் அப்படியல்ல. ஆகவே, அவர்கள் நாட்டுக்காக கூடுதலாக தங்கள் பங்களிப்பைச் செய்யவேண்டும் என்னும் நோக்கில் இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |