பிரித்தானியாவில் சடலமாக கிடந்த சிறைக் கைதி: 3 கைதிகள் மீது கொலை வழக்குப்பதிவு
குழந்தை கொலையாளி ஒருவர் பிரித்தானிய சிறைச்சாலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட கைது
பிரித்தானியாவின் HMP வேக்ஃபீல்ட் சிறைச்சாலையில் குழந்தை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை காலை இந்த சம்பவம் தெரியவந்ததை அடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று சிறைக் கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
HMP வேக்ஃபீல்ட் சிறைச்சாலையில் ஒரு மாதத்திற்குள் நடைபெறும் இரண்டாவது மரண சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தையை கொன்ற குற்றவாளி
33 வயதான கைல் பெவான் என்ற நபர் சினேட் ஜேம்ஸ் என்ற பெண்ணை பேஸ்புக்கில் சந்தித்து நட்பு பாராட்டிய நிலையில், விரைவிலேயே பெம்ப்ரோக்ஷையரில் உள்ள சினேட்டின் வீட்டிற்குள் கைல் பெவான் குடியேறியுள்ளார்.

இதையடுத்து 2020ம் ஆண்டு துணைவி சினேட் ஜேம்ஸின் 2 வயது மகளான லோவா ஜேம்ஸை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டுகளை கைல் பெவான் மறுத்த நிலையில், ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்றம் விசாரணைக்கு பிறகு குற்றவாளி என 2023ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், குழந்தைக்கு மரணம் ஏற்படுத்தியது அல்லது அனுமதித்தது ஆகிய குற்றத்திற்காக உயிரிழந்த குழந்தையின் தாய் சினேட் ஜேம்ஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |