பிரித்தானியாவில் ஹொட்டலில் தங்கவைக்கப்பட்ட சிறார்கள் நூறுக்கும் அதிகமானோர் மாயம்: பகீர் பின்னணி
181 சிறார்கள் ஒன்றின் பின் ஒன்றாக மாயமான நிலையில், 65 சிறார்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.
சட்டவிரோதமாக கஞ்சா தோட்டங்களில், தொழிற்சாலைகளில் பணிக்கு ஈடுபடுத்தப்படலாம்
பிரித்தானியாவில் அகதிகளாக தனியாக நுழைந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள், தங்கியிருந்த ஹொட்டலில் இருந்து மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஜூலை முதல் ஆகஸ்டு 2022 வரையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த ஹொட்டல்களில் இருந்து 116 சிறார்கள் எந்த தகவலும் இன்றி மாயமாகியுள்ளனர்.
@getty
11 வயதுக்கு உட்பட்ட தொடர்புடைய சிறார்கள் துஸ்பிரயோகங்களுக்கு இலக்காகியிருக்கலாம் அல்லது சட்டவிரோதமாக கஞ்சா தோட்டங்களில், தொழிற்சாலைகளில் பணிக்கு ஈடுபடுத்தப்படலாம் என அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நிர்வாகிகளால் குடியிருப்பினை ஏற்படுத்தித் தர முடியாமல் போகவே, ஜூலை 2021 முதல் ஜூன் 2022 வரையில் சுமார் 1,606 சிறார்கள் தற்காலிகமாக ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதில் 181 சிறார்கள் ஒன்றின் பின் ஒன்றாக மாயமான நிலையில், 65 சிறார்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். நிரந்தரமாக அவர்களை தங்கவைக்க மாற்று ஏற்பாடுகள் அமையும் வரையில், ஹொட்டல்களில் அவர்களை தங்க வைப்பது தவிர வேறு வழியில்லை என உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
@getty
இதனிடையே, தஞ்சம் கோரும் மக்களை இனி ஹொட்டல்களில் தங்க வைக்கும் ஏற்பாடு ரத்து செய்யப்படும் என புதிய உள்விவகார செயலர் Suella Braverman உறுதி அளித்துள்ளார்.
மேலும், 12,000 புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டலில் தங்கவைக்க நாள் ஒன்றிற்கு 3 மில்லியன் பவுண்டுகள் பொதுமக்கள் வரிப்பணம் செலவாகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.