குடும்ப உறுப்பினர்களால் சீரழிக்கப்படும் சிறார்கள்: சுவிஸ் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அறிக்கை
சுவிட்சர்லாந்தில் 2020ல் மட்டும் 1590 சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் உடல் மற்றும் உளவியல் துன்புறுத்தலுக்கும் இலக்கானதாக சுவிஸ் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுவிஸ் இது 12வது ஆண்டாக சிறார் துன்புறுத்தல் தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதில் 37% வழக்குகள் மருத்துவ சோதனைகளில் வெளிச்சத்திற்கு வருகிறது.
சிறார்கள் மீதான 27% வழக்குகள் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 20 சதவீத சிறார்கள் உளவியல் துன்புறுத்தலுக்கு இலக்காவதாகவும், 16% சிறார்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்காகும் சிறார்கள் பொதுவாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
கொடூர துன்புறுத்தல் காரணமாக 2020ல் மூன்று பிஞ்சு குழந்தைகள் சுவிட்சர்லாந்தில் பலியாகியுள்ளன. மேலும் சுவிஸில் கொடூர துன்புறுத்தலுக்கு இலக்காகும் 18 சதவீத குழந்தைகள் ஒரு வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிய வந்துள்ளது.
6 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் 44 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு இலக்காகின்றனர். இதில், 75% வழக்குகளில் குடும்ப உறுப்பினர்களே சிறார்களை சீரழிப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
14% வழக்குகளில் நெருங்கிய நண்பர்களால் சீரழிக்கப்பட்டுகின்றனர். ஆனால் வெறும் 4% வழக்குகளில் மட்டும் முகம் தெரியாத நபர்களால் சிறார்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் 1590 என்றாலும், உண்மையில் பல மடங்கு வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.