சிறார் பாதுகாப்பு... மெற்றாவுக்கு 567 மில்லியன் டொலர் அபராதம்
சிறார் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கத் தவறியதற்காக, மெற்றா நிறுவனத்திற்கு மேலும் 567 மில்லியன் டொலர் அபராதம்.
சிறார்களுக்குத் தங்கள் தளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கத் தவறியதற்காக, மெற்றா (Meta) நிறுவனம் மேலும் 567 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்று நியூ மெக்ஸிகோவைச் சேர்ந்த அமெரிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுத் தொல்லை
குழந்தை பாதுகாப்பு விவகாரத்தில் மெற்றா நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதம் இதுவாகும். அந்தச் சமூக ஊடக நிறுவனம் காற்று மாசுபாட்டைப் போன்றதொரு பொதுத் தொல்லை என்று கூறிய நீதிபதி பிரையன் பெஷைட், எதிர்காலத் தீங்குகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிதியத்தில் அந்நிறுவனம் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வியாழக்கிழமையன்று அளிக்கப்பட்ட தீர்ப்பானது, இவ்வழக்கில் மெற்றா நிறுவனம் ஏற்கனவே செலுத்த உத்தரவிடப்பட்ட 375 மில்லியன் டொலர் அபராதத் தொகையுடன் கூடுதலாக அமைவதுடன், இதன் மூலம் மொத்த அபராதத் தொகை 942 மில்லியன் டொலராக உயர்கிறது.
மெற்றா நிறுவனத்தை ஒரு தொழிற்சாலையுடன் ஒப்பிட்ட நீதிபதி பீட்ஷைட் (Biedscheid); அதில் விளம்பரங்களும் உள்ளடக்கமும் அதன் தயாரிப்புகளாகவும், சிறார்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவை குறைக்கப்பட வேண்டிய மாசுபாடாகவும் கருதப்படுகின்றன.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் ஆகியவற்றைச் சொந்தமாகக்கொண்டு இயக்கும் மெற்றா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,
மேல்முறையீடு
நாங்கள் இந்தத் தீர்ப்புடன் உடன்படவில்லை, மேலும் மேல்முறையீடு செய்வோம் என்றும் கூறியுள்ளார். அத்துடன், எங்கள் தளங்களில் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், மேலும் தீய சக்திகளையும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தையும் கண்டறிந்து அகற்றுவதில் உள்ள சவால்கள் குறித்து வெளிப்படையாக இருந்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் முன்னதாக வழங்கப்பட்ட 375 மில்லியன் டொலர் தீர்ப்பு குறித்து, மெற்றா நிறுவனம் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறி, இதேபோன்ற ஒரு விளக்கத்தையும் அளித்திருந்தது.

சிறார் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக மெற்றா மீது ஒரு மாகாணம் வெற்றிகரமாக வழக்குத் தொடர்ந்தது இதுவே முதல் முறையாகும்.
மெற்றா நிறுவனம் தற்போது அமெரிக்காவில் இதே போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |