ஆங்கிலக் கால்வாயைக் கடக்க நடந்த முயற்சி... படகில் மிதிபட்டு இறந்த குழந்தை: பலர் மரணம்
பிரித்தானியாவில் நுழையும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்று ஒரு குழந்தை உட்பட பலர் மரணமடைந்துள்ளதாக பிரெஞ்சு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாஃபியாக்களுக்கு
பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Bruno Retailleau தெரிவிக்கையில், மரணமடைந்த குழந்தையானது மிதிக்கப்பட்டு இறந்ததாக குறிப்பிட்டுள்ளார். கால்வாயை கடக்க முயன்ற பலர் இறந்தனர். ஒரு குழந்தை படகில் மிதிபட்டு இறந்துள்ளது என அவர் சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த கொடூர மரணத்திற்கு காரணம் ஆட்கடத்தல் குழுக்களே என குறிப்பிட்டுள்ள அவர், இந்த மரணக் கடவை ஏற்பாடு செய்து பணக்காரராக்கும் இந்த மாஃபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை பிரான்ஸ் அரசு தீவிரப்படுத்தும் என்றார்.
உள்ளூர் நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், கலேஸ் கடற்கரையில் மூன்று பேர் இறந்தனர், அதே போல் பவுலோன் அருகே ஒருவர் மரணமடைந்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தம் 395 புலம்பெயர்ந்தோர்
செப்டம்பர் மாதம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற நிலையில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 12 பேர்கள் மரணமடைந்தனர். அதில் 10 பெண்கள் மற்றும் சிறுமிகளும் உட்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து மொத்தம் 395 புலம்பெயர்ந்தோர் ஏழு படகுகளில் பிரித்தானியாவுக்கு வந்தனர். இந்த ஆண்டு இதுவரை 25,639 புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை அதிகம் என்றும், அப்போது 25,330 பேர்கள் பிரித்தானியவுக்குள் சிறு படகுகலில் நுழைந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |