விமானத்தில் வந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு: உடனே ரூ.10 லட்சம் கொடுத்து உதவிய தமிழக முதல்வர்
அமெரிக்காவில் இருந்து வந்த போது, தன்னுடைய 3 வயது மகளுக்கு திடீரெனெ உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தந்தையிடம் சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் கொடுத்த உதவிய தமிழக முதலமைச்சரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு உடல்நலம் பாதிப்பு
தமிழக மாவட்டம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் அமெரிக்காவின் சான்பிரான்ஸ்கோவிலில் இருந்து விமானம் மூலம் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவருடைய மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
உதவிய முதலமைச்சர்
அங்குள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில், மனோஜிடம் இருந்த மொத்த பணமும் செலவழிந்து விட்டது.
இதனால், அவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உதவி கோரினார். உடனடியாக , தமிழக முதலமைச்சர் 10 லட்சம் பணத்தை கொடுத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்தார்.
இதனைத்தொடர்ந்து துருக்கியில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு குழந்தை வந்தடைந்தது. பின்பு, ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு குழந்தையும், தந்தையும் வந்தனர்.
அப்போது, அவர்களை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அனுப்பி வைத்தார். அங்கு, குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |