வறுமை... வாழ்க்கையை மாற்றிய ரூ 50,000 முதலீடு: இன்று சொத்து மதிப்பு ரூ 18,330 கோடி
ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தவர், ரூ 50,000 முதலீட்டில் துவங்கிய தொழிலால் இன்று ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு உச்சம் கண்டுள்ளார்.
ஹோமியோபதி கிளினிக்
ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தவர் ராமேஸ்வர ராவ். பாடசாலைக்கு செல்ல பல மைல்கள் நடந்தார். பள்ளிக்கல்வியை முடித்தவர் ஐதராபாத்தில் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.
தொடர்ந்து தில்சுக்நகரில் ஒரு ஹோமியோபதி கிளினிக் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் தான் ரியல் எஸ்டேட் தொழில் என்பது ஐதராபாத்தில் அமோகமாக வளரத் தொடங்கியது.
குடியிருப்புகளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் நிலத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் தான் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ரூ 50,000 முதலீட்டில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நிலத்தை ரூ 1.50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதுவே அவரை ஹோமியோபதி கிளினிக்கில் இருந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட காரணமாக அமைந்தது.
கட்டுமான நிறுவனத்தின் தலைவராக
1981ல் My Home Group என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் ஐதராபாத் நகரத்திலேயே மிகப் பெரிய ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
அத்துடன் கட்டுமானத்திற்கு தேவை என்பதால், மகா சிமெண்ட் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தார்.
தற்போது My Home கட்டுமான நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனத்தின் தற்போதைய வருவாய் என்பது ரூ 4,000 கோடி என்றே கூறப்படுகிறது.
சிமெண்ட் நிறுவனம் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் இவருக்கு சொந்தமாக உள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், தற்போதைய இவரது சொத்து ,மதிப்பு ரூ 18,330 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |