இந்த கிராமத்தில் அனைவருமே திருடர்கள்! பங்களாவில் ராஜவாழ்க்கை வாழ்வது அம்பலம்
இந்தியாவில் உள்ள கிராமமொன்றில் அனைவருமே திருட்டு தொழில் செய்து பங்களாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
பீகாரின் ககிகார் மாவட்டம் கோதா பகுதியில் ஜீரப்கஞ்ச் என்ற கிராமம் உள்ளது, சுமார் 1500 வசிக்கும் இந்த கிராமத்தில் அனைவருமே திருடர்கள்.
திருட்டை மட்டுமே தங்களது முழுநேர தொழிலாக செய்து வருகின்றனர், தங்களது பிள்ளைகளுக்கும் கல்வியை கற்றுக்கொடுக்காமல் திருட்டு குறித்து பாடம் எடுக்கின்றனர்.
முதலில் சிறு சிறு திருட்டாக தொடங்கி வங்கி, வீடு என இவர்களது கைவரிசை நீள்கிறது, இதனால் அதிகளவில் பணம் புரள பங்களா வீடு கட்டி சொகுசாக ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகிறார்களாம்.
தங்களது குலதெய்வத்துக்கு பூஜை செய்து வழிபட்டுவிட்டு திருட்டு தொழிலில் களமிறங்குவது வழக்கமாம், இதேபோல் திருடிய பணத்தில் ஒரு பங்கை ஊர் தலைவரிடம் வழங்கிவிடுவார்களாம்.
யாராவது திருட்டு பிடிக்கவில்லையென்றாலோ, குற்றத்தில் ஈடுபடவில்லையென்றாலோ அந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிட வேண்டுமாம்.
இந்த விவரங்கள் வெளியே தெரியவர குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளனர்.