பசியுடன் பள்ளிக்கு வரும் பிள்ளைகள்: கனடா பிரதமர் எடுத்துள்ள முடிவு
கனடாவில், வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ மாணவியருக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு பிள்ளை எனக்கு பசிக்கிறது என்றால்...
நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் துவக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம், பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
Kristen Everson/CBC
கனடா பள்ளிகளில் விரைவில் மதிய உணவுத் திட்டம்
ஆகவே, வரும் கல்வியாண்டிலிருந்து கனடா பள்ளிகளில் கூடுதலாக, 400,000 பிள்ளைகளுக்கு சத்துள்ள மதிய உணவு வழங்க, கனடா பெடரல் அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று இந்த அறிவிப்பை கனடா பிரதமரும், நிதியமைச்சர் Chrystia Freelandம் வெளியிட்டார்கள்.
நாடு முழுவதும் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டம் இல்லாத ஒரே G7 நாடு கனடாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |