ஒன்லைனில் விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகள்: கனடா பொலிசார் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
பிரித்தானியர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கனேடியரிடம் விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகள்
2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22) என்னும் இளைஞர் அதே ரசாயனத்தின் உதவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.
2019க்கும் 2020க்கும் இடையில் ஒன்ராறியோவில் இதேபோல, அதே ரசாயனத்தைப் பயன்படுத்தி குறைந்தது 23 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒன்லைனில் விஷம் விற்ற கனேடியர்
இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த ரசாயனம், ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக The Times பத்திரிகை தெரிவித்துள்ளது. தனது தயாரிப்புகளை உலகம் முழுமைக்கும் அனுப்பிவருவதாக அந்த இணையதளத்தில் பெருமையாக விளம்பரமும் செய்துள்ளார் Kenneth Law.
அந்த ரசாயனம் மட்டும் தன் பிள்ளை கையில் கிடக்காமலிருந்திருந்தால், தன் மகன் இப்போது உயிரோடு இருந்திருப்பான் என்கிறார் Tomஇன் தந்தையான David Parfett.
The Times/News Licensing)
பொலிசார் மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டு
இந்நிலையில், கிட்டத்தட்ட தன் மகளை அந்த ரசாயனத்துக்கு இழக்கவிருந்த ஒரு கனேடிய பெண், பொலிசார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஒன்ராறியோவைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் மகள் அதே ரசாயனத்தை வாங்கி உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண் தன் மகள் துடிதுடித்துகொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக அவசர உதவியை அழைத்ததால், அந்த இளம்பெண் உயிர் பிழைத்தாள்.
(Submitted)
அந்த விடயம் குறித்து பொலிசாரிடம் தான் புகாரளித்து, அது குறித்து விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டபோது, அவர்கள் தன்னையே கேள்வி கேட்டதாகவும், தான் அந்த ரசாயனம் வந்த கவரைக் காட்டியபோது, அதை பொலிசார் பறித்துவைத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் அந்த பெண்.
Public Safety Announcement: If you notice payment or transactions related to any of these online companies, please contact us at 1-888-714-0003 or email 11Divproject@peelpolice.ca. If you wish to remain anonymous, please call Crime Stoppers at 1-800-222-TIPS (8477). pic.twitter.com/XBVjP4Hn5K
— Peel Regional Police (@PeelPolice) June 16, 2023
அப்போதே பொலிசார் அந்த விடயம் குறித்து விசாரித்திருந்தால் 20க்கும் மேற்பட்ட பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்கிறார் அவர். ஆனால், கனேடிய பொலிசார் ஒரு ஆண்டுக்குப் பின்னர்தான் விசாரணையைத் துவக்கினார்கள்.
மேலும், லண்டனைச் சேர்ந்த Neha Raju மற்றும் Tom Parfett என்னும் இரண்டு பிள்ளைகளும் அந்த ரசாயனத்துக்குப் பலியானதைத் தொடர்ந்து, பிரித்தானிய பொலிசாரும் இரண்டு முறை கனேடிய பொலிசாரை தொடர்புகொண்டும், அப்போதே கனேடிய பொலிசார் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |