இங்கிலாந்தில் கடற்கரையில் உயிரிழந்த பிள்ளைகள் இவர்கள்தான்: மர்மம் மட்டும் விலகவில்லை
இங்கிலாந்திலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து பிள்ளைகள் இருவர் மீட்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த விடயத்தில், இன்னமும் மர்மம் நீடிக்கிறது.
இங்கிலாந்தில் கடற்கரையில் உயிரிழந்த பிள்ளைகள் இவர்கள்தான்
இங்கிலாந்திலுள்ள Bournemouth கடற்கரையில் நிகழ்ந்த ஒரு அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, 10 பேருக்கு மருத்துவ உதவிக்குழுவினர் சிகிச்சையளிக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
அவர்களில், ஒரு 12 வயது சிறுமியும், ஒரு 17 வயது இளைஞரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, மற்ற எட்டு பேருக்கு கடற்கரையிலேயே சிகிச்சையளிக்கப்பட்டது.
HANDOUTS
துரதிர்ஷ்டவசமாக, அந்த சிறுமியும், இளைஞரும் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்கள்.
அந்த சிறுமியின் பெயர் Sunnah Khan என்றும், அவர் Buckinghamshireஐச் சேர்ந்தவர் என்றும், அந்த இளைஞரின் பெயர் Joe Abbess என்றும், அவர் Southamptonஐச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
PA MEDIA
நீடிக்கும் மர்மம்
இந்நிலையில், அந்த கடற்கரையில் எதனால் குழப்பம் நேரிட்டது, எதனால் அத்தனை பேர் காயமடைந்தார்கள், எதனால் Sunnahவும் Joeவும் உயிரிழந்தார்கள் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சொல்லப்போனால், அந்த இரண்டு உயிர்களின் இழப்புக்குக் காரணமாக இருந்ததாக, சம்பவ இடத்திலிருந்த 40 வயதுகளிலிருந்த ஒரு ஆண் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுவிட்டார்.
STEPHANIE WILLIAMS
அத்துடன், படகு ஒன்று கடலில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதாக முதலில் கூறப்பட்ட நிலையில், பொலிஸ் விசாரணையில், அந்த படகு யார் மீதும் மோதவில்லை என்றும், அந்த பிள்ளைகள் இருவர் மரணத்துக்கும் அந்த படகுக்கும் சம்பந்தம் இல்லை என தற்போது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, Bournemouth கடற்கரையில் நிகழ்ந்த மரணங்கள் மற்றும் காயங்களுக்கு என்ன காரணம் என்பது இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது.
@BUHALIS