கனடாவில் குழந்தைகள் காப்பகத்துக்குள் பாய்ந்த கார்: ஒரு குழந்தை பலி, ஆறு பேர் காயம்
கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகம் ஒன்றிற்குள் கார் ஒன்று பாய்ந்த சம்பவத்தில் ஒரு குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது.
குழந்தைகள் காப்பகத்துக்குள் பாய்ந்த கார்
நேற்று புதன்கிழமையன்று, மதியம் 3.00 மணியளவில், ஒன்ராறியோ மாகாணத்தின் Richmond Hill நகரில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகம் ஒன்றிற்குள் கார் ஒன்று பாய்ந்தது.
Richard Lautens Toronto Star
இந்த விபத்தில் ஏழு குழந்தைகள் காயமடைந்த நிலையில், அவர்களில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான்.
மற்ற ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை படுகாயமடைந்துள்ளது, மற்ற குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது. அவர்களுடன் காப்பக ஊழியர்கள் மூன்று பேரும் காயமடைந்துள்ளார்கள்.
Richard Lautens/Toronto Star
காரை ஓட்டிய தனது 70 வயதுகளிலிருக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வேண்டுமென்றே காரைக் கொண்டு மோதியதாக தோன்றவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |