அவள் ஒரு தேவதையாக இருந்தாள்: கோர விபத்தில் பலியான சிறுமிகள்..உறவினர் உருக்கம்
Two Children killed in car crash west of melbourne: அவுஸ்திரேலியாவில் கோர விபத்தில் பலியான சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு மேற்கே நிகழ்ந்த கோர விபத்தில் பலியான சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோர விபத்து
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு மேற்கே, பாடசாலையில் இருந்து 4WD வாகனம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கோர விபத்திற்குள்ளானது.

இதில் சாரா எல் ஹவ்லி (7) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, ஓசாமா உட்பட பிற குழந்தைகள் காயங்களுடன் மருத்துவானைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட சிறுமி ஓசாமா (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சிறந்த மாணவி
இந்த நிலையில் உயிரிழந்த சிறுமிகள் சாரா, ஓசாமா இருவரும் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் இருவரும் மெல்டன் சவுத்தில் உள்ள அல் இமான் பாடசாலையில் பயின்றனர். சிறுமி சாரா 'வாரத்தின் சிறந்த மாணவி' என்ற விருதை பெற்றவர் ஆவார்.
அவரது உறவினர் ஒருவர் சாரா குறித்து பேசும்போது, 'அவள் பாடசாலையிலேயே மிகவும் புத்திசாலியான மாணவி. அவள் ஒரு தேவதையாக இருந்தாள்... இப்போதும் ஒரு தேவதையாக இருக்கிறாள். நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன், அவள் இறந்துவிட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
நாங்கள் அங்கு செல்ல முயன்றோம். ஆனால், அவளைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. எனினும் என் மகளை அவர்கள் (பொலிஸார்) அனுமதித்தார்கள்; அவள் சாராவை பார்த்துவிட்டாள்' என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |