சுவிட்சர்லாந்தில் ஒளித்துவைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள்: அதிரவைக்கும் வரலாறு...
இன்று சுவிட்சர்லாந்து உலகின் செல்வம் மிக்க நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதின் பின்னணியில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு உள்ளது என்னும் அதிகம் அறியப்படாத செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் முன்னேற்றத்துக்காக புலம்பெயர்ந்தோர் செய்துள்ள தியாகம்
1950 முதல் 1990கள் வரையிலான காலகட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் இத்தாலியிலிருந்தும், அதற்குப் பின், ஸ்பெயின் போர்ச்சுக்கல் மற்றும் யூகோஸ்லாவியா என அப்போது அழைக்கப்பட்ட நாட்டிலிருந்தும் சுவிட்சர்லாந்துக்கு வந்திருக்கிறார்கள்.
தொழிற்சாலைகள், சாலைகள், கட்டிடப்பணி நடக்கும் இடங்கள், உணவகங்கள் என பல இடங்களில் இந்தப் பணியாளர்கள் வேலை செய்து, சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.
image - EGIDIO STIGLIANO
குறுகிய கால பணி அனுமதி, ஒரு நீண்ட கட்டிடத்தில் தங்குமிடம் என வாழ்ந்துவந்த அந்த பணியாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அனுமதிக்கப்பட்ட ஒரே விடயம் வேலை செய்வது மட்டுமே.
இதில் இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், வேலை செய்யும் கணவனும் மனைவியும் சுவிட்சர்லாந்துக்கு வரலாம், ஆனால், அவர்களுடைய பிள்ளைகளை அழைத்து வர அனுமதி கிடையாது. ஆகவே, பிள்ளைகளை தங்கள் நாட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்கு வந்திருக்கிறார்கள் பெற்றோர்.
image - SWISS SOCIAL ARCHIVE
அப்படி பிள்ளைகளை விட்டு விட்டு வேலை ஒரு தேவையா என சிலர் நினைக்கலாம். ஆனால், அது இத்தாலி போன்ற நாடுகள் வறுமையில் வாடிய காலகட்டம். சில வீடுகள், ஏன் சில கிராமங்களே இப்படி சுவிட்சர்லாந்துக்கு வேலைக்கு வந்தவர்களை நம்பியிருந்திருக்கின்றன.
இந்நிலையில், தங்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாழ முடியாத சில பெற்றோர், யாருக்கும் தெரியாமல் பிள்ளைகளை சுவிட்சர்லாந்துக்குள் கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் கொண்டுவரப்பட்டதால், அவர்களுக்கு பள்ளிப் படிப்பு கிடையாது, வெளியே விளையாட முடியாது. பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வேலைக்குச் சென்ற பெற்றோர் ஏராளம்.
வெளியே விளையாடச் சென்ற சிறுவனால் எழுந்த பிரச்சினை
அப்படி வளர்க்கப்பட்ட Egidio என்னும் ஒரு சிறுவன் விளையாட வெளியே செல்ல, அவன் இருப்பது வெளியே தெரியவர, பொலிசார் வந்து அவனை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆனால், நல்ல வேளையாக அவனது பெற்றோருக்கு வேலை கொடுத்தவர் அவனுக்கு ஸ்பான்சர் செய்திருக்கிறார்.
image - EGIDIO STIGLIANO
ஆனால், அதற்குப் பின்புதான் இப்படி ஆயிரக்கணக்கான பிள்ளைகள் சுவிட்சர்லாந்தில் மறைந்து வாழ்வது தெரியவந்திருக்கிறது. புலம்பெயர்ந்த பணியாளர்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட, அதன்பின் பொலிசார் இந்தப் பிள்ளைகளைக் கண்டும் காணாததுபோல் விடத்துவங்க, சில கிராமங்களில் இந்த பிள்ளைகளுக்காக இரகசியமாக பள்ளிகள் கூட துவக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்படி மறைந்து வாழ்ந்தவர்களில் Egidio, மற்றும் Melinda என்பவர்கள் உட்பட பலர் தற்போது இந்த விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் கொள்கை தங்கள் குடும்பங்களைப் பிரித்துவிட்டது என்றும், பலர் அதனால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளார்களென்றும் கூறும் இவர்கள், சுவிட்சர்லாந்து அதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என குரல் எழுப்பத் துவங்கியுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்து இழப்பீடு கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தாலும், அதைவிட முக்கியம் தங்களுக்கான அங்கீகாரம்தான் என்கிறார்கள் அவர்கள்.
Melinda தற்போது சூரிச்சில் ஒரு எழுத்தாளராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார். Egidio, St Gallenஇல் neuro educator என்னும் பணியில் இருக்கிறார்.