கனேடியரிடம் ஒன்லைனில் விஷம் வாங்கிய பிள்ளைகள்: நடவடிக்கையைத் துவங்கியுள்ள பிரித்தானிய பொலிசார்
கனேடியர் ஒருவர் ஒன்லைனில் விற்ற நச்சுப்பொருளை வாங்கி உட்கொண்டு பிள்ளைகள் சிலர் தற்கொலை செய்துகொண்ட விடயம் பிரித்தானியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்லைனில் விற்ற நச்சுப்பொருளை உட்கொண்டு பிள்ளைகள் தற்கொலை
கனேடியர் ஒருவரிடம் ஒன்லைனில் விஷம் வாங்கி பிரித்தானிய பிள்ளைகள் சிலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக பிரித்தானிய பொலிசார் நடவடிக்கையைத் துவங்கியுள்ளனர்.
கனேடியரான Kenneth Law (57) என்பவர், 40க்கும் அதிகமான நாடுகளுக்கு 1,200 பாக்கெட், குறிப்பிட்ட நச்சுபொருளை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
muchloved.com
கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலும் சிலர் அந்த நச்சுப்பொருளை ஒன்லைனில் வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ரொரன்றோவில் Kenneth Law கைது செய்யப்பட்டுள்ளார்.
நடவடிக்கையைத் துவங்கியுள்ள பிரித்தானிய பொலிசார்
Kenneth Lawவிடம் பிரித்தானிய பிள்ளைகள் சிலரும் அந்த நச்சுப்பொருளை வாங்கியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, யாருக்கெல்லாம் அந்த நச்சுப்பொருள் அனுப்பப்பட்டது என்பது குறித்து, சம்பந்தப்பட்ட வீடுகளுக்கே சென்று சோதனை நடத்தத் துவங்கியுள்ளார்கள் பிரித்தானிய பொலிசார்.
David Parfett
தேசிய குற்றவியல் ஏஜன்சியும், கனேடிய அதிகாரிகளுடன் இணைந்து, பிரித்தானியாவில் அந்த நச்சுப்பொருளை வாங்கியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
#Gravitas | A Canadian chef has been accused of selling lethal poison to suicidal youngsters. At least 4 deaths in the UK have been linked to his online company.@MollyGambhir brings you a report.
— WION (@WIONews) April 27, 2023
Watch more: https://t.co/AXC5qRuO3J pic.twitter.com/ryzVoFrvCe