பிரித்தானியாவில் துஸ்பிரயோக குற்றவாளிகளுடன் சிறை வைக்கப்படும் புலம்பெயர் அப்பாவி சிறுவர்கள்
பிரித்தானியாவில் சிறு படகுகளில் ஆதரவில்லாமல் புலம்பெயரும் அப்பாவி சிறார்கள் பலர் கொடூர துஸ்பிரயோக குற்றவாளிகளுடன் சிறை வைக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தனியாக புலம்பெயரும் சிறார்களே
பெரும்பாலும் ஆதரவில்லாமல் தனியாக புலம்பெயரும் சிறார்களே இவ்வாறான சிக்கலை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. இதில் கடத்தப்பட்டுவரும் சிறார்களே அதிகம் எனவும், இவர்களை HMP எல்ம்லி, கென்ட் ஆகிய பகுதிகளிலும் வெளிநாட்டவர்களான கைதிகளுடனும் சிறை வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
@epa
மிக சமீபத்தில் எல்ம்லியில் முன்னெடுத்த சோதனையில் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியவர்களும் அங்கே அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை அப்படியான 14 சிறார்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெரும்பாலும் சூடான் அல்லது தெற்கு சூடான் குழந்தைகளே லிபியா வழியாக பிரித்தானியாவுக்கு பயணம் செய்கின்றனர். இதனிடையே, இந்த வார இறுதியில் உள்விவகார அலுவலகம் இந்தப் பிரச்சினையில் உடனடி விசாரணையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
@getty
சிறைவக்கப்பட்டுள்ள சிறார்கள் பலர்
அத்துடன் வயது வந்தோருக்கான சிறைக்குள் இருக்கும் சிறார்கள் என்று நம்பப்படும் எவரையும் அவசரமாக விடுவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறைவக்கப்பட்டுள்ள சிறார்கள் பலர் உதவிக்கு யாரை அழைப்பது என்று தெரியாமல் உள்ளனர் எனவும் சட்ட ஆலோசனையை போதுமான அளவில் அணுகுவதில் இருந்து தடுக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
@getty
மட்டுமின்றி எல்ம்லியில் அனுப்பப்படும் சிறார்களை உள்விவகார அமைச்சகம் வயது வந்தவர்கள் என்றே அடையாளப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. எல்ம்லியில் முன்னெடுக்கப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, ஒரு கணக்கெடுப்பில் நான்கு கைதிகளில் ஒருவர் சிறையில் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.
துஸ்பிரயோக வழக்கில் சிக்கியவர்கள் எவரும் எல்ம்லியில் இல்லை என கூறப்பட்டாலும், அப்படியான 70 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |