அனைத்து சிறார்களுக்கும் பொது பேருந்துகளில் இனி இலவச பயணம்: சுவிஸ் நகரம் ஒன்று முடிவு
சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரில் அனைத்து சிறார்களும் பொது பேருந்துகளில் இனி இலவச பயணம் மேற்கொள்ள முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கோரிக்கையை லூசர்ன் நகர சிரார் நாடாளுமன்றம் முன்வைத்த போது, முன்னர் அதை லூசர்ன் நாடாளுமன்றம் நிராகரித்திருந்தது.
தற்போது சிரார்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன், நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளது. அதாவது 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மண்டலம் 10குள் மட்டுமே பொது பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும்.
மேலும், சிறார்கள் பேருந்து பயணங்களை தவிர்த்து, இருசக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக சிறார் ஒருவருக்கு குடியிருப்புக்கு திரும்ப பேருந்து கட்டணமானது 6.20 பிராங்குகள் செலவாகிறது. இதையே ஆண்டு சந்தாவாக செலுத்தினால் 610 பிராங்குகள் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே லூசர்ன் நகர சிறார்கள் பொது பேருந்துகளில் இலவச பயணத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் விரிவான ஒரு கலந்தாலோசனைக்கு பின்னர் தெளிவான முடிவு ஒன்றை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக லூசர்ன் நாடாளுமன்றம் தரப்பில் கூறப்படுகிறது.