அட்டகாசமான சுவையில் குழந்தைகளுக்கு பிடித்த சில்லி மோமோஸ் செய்வது எப்படி?
வட இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான ஒரு உணவில் முக்கிய பங்கு வகிப்பது மோமோஸ்.
இது தென் இந்தியாவிலும் பிரபலமாகி இருகிறது. மோமோஸ் என்பது நம்மிள் பலருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவாகும்.
சிறியவர் முதல் பெரியவர் அவரை அனைவருக்கும் பிடித்த மோமோஸ் சாப்பிடுவார்கள். ஆகவே இதை வெளியில் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எப்படி செய்து சாப்பிடலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மேல் மாவு செய்ய
- மைதா - 2 கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 தேக்கரண்டி தண்ணீர்
காய்கறி கலவை செய்ய
- வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது
- கேரட் - 1/4 கப் நறுக்கியது
- போஞ்சி - 1/4 கப் நறுக்கியது
- பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
- இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
- முட்டைகோஸ் - 1/4 கப் நறுக்கியது
- குடைமிளகாய் - 1/4 கப் நறுக்கியது
- உப்பு - 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
சில்லி மோமோஸ் செய்ய
- எண்ணெய்
- பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது
- வெங்காயம் - 1 நறுக்கியது
- குடைமிளகாய் - 1 நறுக்கியது
- சில்லி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
- தக்காளி கெட்சப் - 3 மேசைக்கரண்டி
- லைட் சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
- உப்பு
- மிளகு தூள்
செய்முறை
1. மேல் மாவு செய்ய, அகல பாத்திரத்தில், மைதா, உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் பிசையவும்.
2. இதை சிறிய உருண்டைகளாக பிரித்து எடுத்து வைக்கவும்.
3. அடுத்து காய்கறி கலவை செய்ய, பாத்திரத்தில், வெங்காயம், கேரட், பீன்ஸ், பூண்டு, இஞ்சி, குடைமிளகாய், முட்டைகோஸ், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து எடுத்து வைக்கவும்.
4. செய்த மாவு உருண்டையை தேய்க்கவும்.
5. இதன் நடுவில் காய்கறி கலவை வைத்து மூடவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் மோமோஸ்'ஸை வறுக்கவும்.
7. பொன்னிறமானதும், மோமோஸ்'ஸை எடுத்து வைக்கவும்.
8. அதே கடாயில் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
9. அடுத்து இதில் சில்லி பேஸ்ட், தக்காளி கெட்சப், லைட் சோயா சாஸ் சேர்த்து கலக்கவும்.
10. இதில் வறுத்த மோமோஸ்'ஸை சேர்த்து கிளறவும்.
11. தேவைப்பட்டால் உப்பு, மிளகு தூள் சேர்த்து எடுத்தால், சுவையான சில்லி மோமோஸ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |