வீட்டில் பிரட் இருக்கா..அப்போ இந்த அட்டகாசமான சில்லி பிரட் செஞ்சி சாப்பிடுங்க
சில்லி பிரட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ஆகும்.
பிரட்டை வைத்து அன்றாடம் செய்யும் உணவுகளுக்கு பதிலாக இந்த வித்யாசமான ஸ்னாக்ஸை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இந்த சுவையான சில்லி பிரட் எப்படி வீட்டிலேயே ஈசியா செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரட்- 5
- எண்ணெய்- தேவையான அளவு
- காய்ந்த மிளகாய்- 5
- பூண்டு- 5 பல்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சை மிளகாய்- 2
- வெங்காயம்- 1
- குடைமிளகாய் - 1
- உப்பு- தேவையான அளவு
- மிளகுத்தூள்-1 ஸ்பூன்
- வினிகர்- 1 ஸ்பூன்
- சோயாசாஸ்- 2 ஸ்பூன்
- தக்காளி சாஸ்- 2 ஸ்பூன்
- சோள மாவு- 1 ஸ்பூன்
- வெங்காயத்தாள்- சிறிதளவு
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் பிரட்டை துண்டு துண்டாக சதுர வடிவில் வெட்டி எண்ணெயில் வருத்து எடுக்கவும்.
பின் ஒரு வாணலில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய பச்சைமிளகாய், குடைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
காய்ந்தமிளகாயை தண்ணீரில் வேகவைத்து மிளகாயை அரைத்த பேஸ்ட்டையும், வினிகர், சோயாசாஸ், தக்காளி சாஸ், சேர்த்து கிளறவும்.
பின் ஒரு சின்ன பௌலில் சோளமாவு தண்ணீர் சேர்த்து கலந்து அதில் ஊற்றிக்கொள்ளவும்.
2 நிமிடம் கொதித்த பின்பு அதில் பிரட் துண்டுகளை சேர்த்து கிளறி அதில் வெங்காயத்தாள் மற்றும் மல்லி இலை தூவி கிளறினால் சுவையான சில்லி பிரட் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |