மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்: மரணத்தை நோக்கிச் செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள்
பிரித்தானியாவில் கர்ப்பிணிப்பெண்ணொருவர் கணவனால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சிறிது நேரத்தில் தான் கொல்லப்படப்போவது தெரியாமல், அவர் தன் கணவனுடன் நடந்து செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்த ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31) மலையுச்சியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
COPFS
அவரது வயிற்றிலிலிருந்த குழந்தையும் பலியாகிவிட்டிருந்தது. இந்த வழக்கில், அன்வர்தான் ஃபவ்ஸியாவைத் தள்ளிவிட்டதாகவும், ஃபவ்ஸியா மற்றும் அவரது வயிற்றிலிருந்த குழந்தை பலியானதற்கு அன்வர்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தற்போது, அன்வர் குற்றவாளி என்பதை எடின்பர்க் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
வெளியாகியுள்ள கடைசி நிமிட புகைப்படங்கள்
இந்நிலையில், தான் மரணத்தை நோக்கிச் செல்வது தெரியாமல், ஃபவ்ஸியா தன் கணவனுடன் மலையுச்சியை நோக்கி நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
COPFS
வெளியாகியுள்ள புகைப்படங்களில், அன்வர் மலையுச்சியை நோக்கிச் செல்வதையும், கர்ப்பிணியான ஃபவ்ஸியா தன் கணவனைப் பின்தொடர்ந்து செல்வதையும் காணலாம். இந்த காட்சிகள் முதன்முறையாக வெளியாகியுள்ளன.
ஃபவ்ஸியா கொல்லப்படும்போது, அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.