AI கேமரா மூலம் மாணவர்களை கண்காணிக்கும் சீன பாடசாலைகள்! அச்சுறுத்தும் தொழில் நுட்பம்
சீனாவில் AI தொழில் நுட்பத்திலான கேமரா மூலம், மாணவர்களை கண்காணிக்கும் பாடசாலை நிறுவனங்களை பலரும் கண்டித்துள்ளனர்.
மாணவர்களை கண்காணிக்கும் கேமரா
சீனாவிலுள்ள சில பாடசாலைகளில் AI என்று அழைக்கப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்களை கண்காணிக்கின்றனர்.
இது தொடர்பாக தற்போது வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றின் மூலம், வளர்ந்து வரும் தொழில் நுட்பம் எப்படி மனித சுதந்திரத்தை எவ்வாறு பறிக்கிறது என்பதனை உணர்த்தியுள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவில் மாணவர்கள் ஒவ்வொருவரும், செயற்கை நுண்ணறிவு மூலம் அவர்களது செயல்கள் மற்றும் அசைவுகள் உட்பட எல்லாவற்றையும் கண்காணிக்கிறது.
ஒவ்வொரு மாணவர்களும் தனித்தனியாக கட்டமிடப்பட்டு, அவரது அசைவுகள் ஒவ்வொன்றும் எண்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.
அச்சுறுத்தும் தொழில் நுட்பம்
இந்த வீடியோவை பார்த்த பலரும் இது மாணவர்களை, வளர்ப்பு நாய்களை போல் கண்காணிக்கிறது. இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் முன்னாள் அரசாங்க ஆராய்ச்சியாளர் ’சீன மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் இப்படித்தான் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு சிறிய அசைவும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்படுகிறது’ என சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவின் மூலம் மாணவர்களின் உடல் பாகங்கள், அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல்கள் முதற்கொண்டு கண்காணிக்கப்பட்டு, ஓவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக தொகுப்பை உருவாக்குகின்றனர்.
பின்னர் அந்த தகவலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதன் மூலம் வகுப்பறையில் மாணவர்களின் நடத்தையை, ஆசிரியர்கள் அறிந்து கொள்ள உதவுவதாக தெரிய வந்துள்ளது.
இது போன்ற தொழில் நுட்பத்தின் மூலம் மாணவர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், மேலும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதாகவும், பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.