வார்த்தைகளால் மோதிக்கொண்டாலும் ஒன்றை மட்டும் விட்டுக்கொடுக்காத சீனாவும் ஜேர்மனியும்
சீனாவை ஜேர்மனி தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பில் கருத்து ஒன்றைத் தெரிவித்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சீனா.
சீன ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி
உக்ரைன் -ரஷ்யப் போர் தொடர்பில் கருத்து ஒன்றைத் தெரிவித்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, இந்தப் போரில் புடின் வெற்றி பெறுவாரானால், அந்த வெற்றி சீன ஜனாதிபதியான ஜி ஜின் பிங் போன்ற பிற சர்வாதிகாரிகளுக்கு எத்தகைய எண்ணங்களைக் கொடுக்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன் சீனா வர்த்தகக் கூட்டளியல்ல, அது ஒரு வகையில் போட்டியாளர் என்று கூறியதுடன், தைவானுக்கெதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் சீனாவை எச்சரித்திருந்தார் அவர்.
அவரது கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது சீனா. விடயம் என்னவென்றால், இவ்வளவும் நடந்தும், ஜேர்மனியின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா திகழ்கிறது என்பதுதான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |