ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கி மீ : சூப்பர் பேட்டரியை அறிமுகம் செய்த சீன கார் நிறுவனம்
சீனாவின் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர் பயணம் செய்வதற்கான சக்தியை தரும் பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் LFP பேட்டரி
சீனாவின் CATL என்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று, உலகின் முதல் 4C சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளது.
Shenxing என பெயர் வைக்கப்பட்ட இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் காரில் 700 கி மீ தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பேட்டரியை வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 0 முதல் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும், மேலும் இதன் மூலம் 400 கிலோ மீட்டர் தூரத்தை காரில் எளிதாக கடக்க முடியும்.
இந்த பேட்டரிகள் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் சார்ஜ் செய்யலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அதிநவீன Shenxing பேட்டரிகள் பொருத்தப்பட்ட கார்கள் அடுத்த ஆண்டு முதல் சந்தையில் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |