இனி காரிலே பறக்கலாம் - நடுத்தர மக்களுக்கான பறக்கும் காரை அறிமுகப்படுத்தும் சீன நிறுவனம்
ஹாலிவுட் படங்களில் கார்கள் வானில் பறப்பது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம்.
தற்போதையை வளர்ந்து வரும் தொழில்நுட்ப உதவியுடன், பறக்கும் கார் என்பது நிஜ உலகில் சாத்தியமாக உள்ளது.
பறக்கும் கார்
சீனாவை சேர்ந்த Chery நிறுவனம், அதனது முதல் பறக்கும் காரை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
🚁 Chinese Chery presented its first flying car Maximum speed - 120 km/h, the model has no steering wheel or gas pedal, everything is controlled by a computer. 👀
— 𝐏𝐇𝐎𝐄𝐍𝐈𝐗⚜️𝐃𝐑𝐀𝐆𝐎𝐍 (@XPHOENIXDRAGON) January 14, 2025
(So who controls the computer controls everything, go figure...) pic.twitter.com/HNGVmTRmzu
2024 அக்டோபர் மாதம் இந்த காரின் ப்ரோட்டோடைப் மாடலை வெளியிட்ட Chery, 80 கிமீ தூரத்திற்கு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றதாக அறிவித்தது.
eVOTL(electric Vertical Take-Off and Landing) மாடல் வகையிலான இந்த கார் பறப்பதற்கு, விமானத்திற்கான தேவையானது போல நீண்ட ஓடுதளம் தேவை இல்லை.
இதை சாலையில் ஓட்டலாம் மற்றும் வானிலும் பறக்கலாம். இதில் சாலையில் ஓட்டும் போதே செங்குத்தாக மேலே எழும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
"இந்த காரானது ஆடம்பர காராக இல்லாமல், நடுத்தர மக்களும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதே இலக்கு" என Chery நிறுவன இயக்குநர் Wang Junjie தெரிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டுக்குள், சீனாவில் வீடுகளிலோ அல்லது விமான டாக்ஸிகளாக 100,000 eVTOLகள் இருக்கலாம் என்று 2024 நவம்பரில் சீனா பொருளாதார கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |